#MaduraiThanksModi ஹேஷ் டாக்கை முந்திய #GoBackModi !!இந்திய அளவில் முதலிடம்
#GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.இதற்காக நாளை அவர் தமிழகம் வருகிறார்.
சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தலமான ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ் டாக்கும், #MaduraiThanksModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.இறுதியில் #GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.