போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பசி தீர்க்கும் வண்ணம், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்து தரும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைப்பகுதி போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி புராரி மைதானத்தில் திரண்ட விவசாயிகள் தங்களது உணவு தேவைகளை தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்கின்றன. சப்பாத்தி, சப்ஜி உணவுகளை மைதானத்திலேயே தயார் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உட்கொள்கின்றன. அந்த வகையில், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்து தரும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று போராட்ட களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சப்பாத்தி, மாவு பதத்தில் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, அவற்றை வட்ட வடிவில் மெலிதாக தேய்த்து, நெருப்பில் சுட்டு, சுடச்சுட சப்பாத்தியாக தயாரிப்பது வரை இந்த ஒரே இயந்திரமே அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கிறது. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் சப்பாத்திகள் வரை தயார் செய்ய முடிகிறது. இது ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான விவசாய மக்களுக்கு உணவளிப்பதோடு, இதில் தாயாரிக்கப்படும், சப்பாத்திகள் அதிக சுவையாக இருப்பதாக கூறுகின்றனர். இதுதவிர போராட்டத்தில் பங்கேற்று உள்ள பெண்களுக்கு வசதியாக 20 மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…