உத்திரபிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் கொடுமை!
உத்திரபிரதேசத்தில் எம்எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள நிஷாத் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விஜய் மிஸ்ரா என்பவரது வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் இளம் பாடகி ஒருவரை அழைத்து கச்சேரி நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் பாடகி வீடு திரும்பும்போது விஜய் மிஸ்ரா அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தற்பொழுது பாடகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அதை வெளியே சொல்லக் கூடாது, அவ்வாறு சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவரது மகனும் இந்த பாடகியை வாரணாசிக்கு அழைத்து ஹோட்டலில் வைத்து ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறிவிட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் இந்த சம்பவம் வீடியோவாக அவர்களிடம் இருந்ததால் தன்னால் வெளியே எத்தனை நாள் சொல்ல முடியவில்லை என்றும், தற்போது விஜய் மிஸ்ரா நில ஆக்கிரமிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தான் துணிந்து புகார் கொடுத்துள்ளதாகவும் பாடகி தெரிவித்துள்ளார்.