M.Phil., Ph.D., மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: யுஜிசி..!
M.Phil., Ph.D., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2022ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிப்பு.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஃபில் மற்றும் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. தேதி நீட்டிக்கப்பட்ட பிறகு, இப்போது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் பொது அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கூறுகையில், “ஆராய்ச்சியாளர்களின் அதிக ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, எம்ஃபில் மற்றும் பிஎச்டி மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க டிசம்பர் 31-க்குப் பதிலாக அதாவது ஜூன் 30, 2022 வரை பல்கலைக்கழகங்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு அவகாசம் அளிக்கலாம்.
ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூன் 30-ஆம் தேதி அல்லது அதற்கு முன் ஆய்வுக் கட்டுரையை சமர்பிப்பதற்கான காலக்கெடுவைக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Keeping in view larger interest of research scholars, last date for submission of thesis for M.Phil./Ph.D. Students has been extended from 31.12.2021 till 30.06.2022. pic.twitter.com/qtMLumUrTJ
— UGC INDIA (@ugc_india) December 2, 2021