ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ரயில்வே பயணிகளின் வசதிக்காக, ஹைதராபாத் நிலையத்தில் அதிநவீன வசதியுடன் ஓய்வெடுப்பத்ற்கு ஸ்லீப்பிங் பாட் என்கிற சூப்பரான படுக்கை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

Sleeping pods in cherlapalli station

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்லீப்பிங் பாட்’ (Sleeping Pod) தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், Wi-Fi என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப்பிங் பாட்-க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதன் மூலம், ரயிலுக்காகக் காத்திருக்கும் போது நீங்கள் நீண்ட நேரம் ஸ்டேஷனில் இருக்க நேர்ந்தாலோ, உங்களுடன் பயணிப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டாலோ, ஹைதராபாத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் பொறுமையாக அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருக்கலாம்.

இது ரயில் நிலையத்தின் வளாகத்திற்குள் இருப்பதால், நீங்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை, எனவே ரயிலைத் தவறவிடுவோம் என்ற பயம் இருக்காது. ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் உள்ள பல நிலையங்களில் இந்த ஸ்லீப்பிங் பாட் வசதி உள்ளது. முதல் முறையாக இந்தியாவில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்பொழுது, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இந்த ஸ்லீப்பிங் பாட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த தூங்கும் பாட்டின் கட்டணம் மலிவு விலையில் வைக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்கள் மட்டுமே தங்குவதற்கு, ஹோட்டலுக்குப் பதிலாக இது போன்ற வசதி ஒன்றை முன்பதிவு செய்வது நல்ல வழி தான்.

பயணிகள் நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சர்வீஸ் கவுண்டரை அணுகி, ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பயன்முறையில் முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். மொத்தத்தில் இது ரயில்வே பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி தான் என்று சொல்ல வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்