கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்.! உற்சாகத்தில் மாணவர்கள்.!
கேரளா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் விதவிதமான சத்துமிக்க உணவுகளை வழங்கி வருகின்றன. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான சுவைமிகுந்த உணவுகளை அம்மாநிலம் அரசு வழங்கி வருகின்றது. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றோரு நாள் வேறு வகையான சாதம் உள்ளிட்ட காய்கறி சாலட், அத்துடன் கோழி கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகள் மாணவர்களுக்கு தினம் வழங்கப்பட்டு வருகின்றது. இது பள்ளி மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டம் அண்டை மாநிலங்களை கவர்ந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.