தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலம்.. கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு!
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி, காற்றழுத்த மண்டலமாக மாறி, புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் நோக்கி வரும் 3ஆம் தேதி நகரும். இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.