ஜூலையில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக ஜூலை மாதத்தில் 87,422 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி 16,147 கோடியும், மாநில ஜிஎஸ்டி 21,418 கோடியும், ஐஜிஎஸ்டி 42,592 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் 20,324 கோடி) மற்றும் செஸ் 7,265 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் 807 கோடி) என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வருவாய் வசூல் ஜூன் மாதத்தை விட குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 90,917 கோடியை வசூலித்திருந்தது. அதுவே 2019 ஜூலை மாதம் ஜிஎஸ்டி 1.02 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதிகமானோர் வரி செலுத்துவோர் தங்களது வரிக்கணக்கை தாக்கல் செய்ததால் கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 86% எனவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயில் 96% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…