ஊரடங்கு உத்தரவால், நம் கண்களுக்கு மறைவாக இருந்த சில இயற்கை காட்சிகளை ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், பல சிரமங்கள் இருந்தாலு, சில நன்மைகளும் உண்டு. ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால், அதன் மூலம் வெளியேற்றப்படும் நச்சு காற்று, மற்றும் கழிவு நீர்களால், இயற்கைக்கு ஏற்படக் கூடிய சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கழிவு நீர் கலப்படம் இல்லாத காரணத்தால் கங்கை நதி தூய்மையானது. மேலும், பெருமளவில் வாகனங்கள் இயக்கப்படததால், காற்று மாசும் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. காற்று மாசு குறைவால், பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் அழகான காட்சி ஜலந்தர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிந்ததுள்ளது. இதற்கு முன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த பனிமலை தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டுகளித்த ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மேலும், உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரில் இருந்து 636 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனியடர்ந்த இமயமலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது. காற்று மாசால் நம் கண்களுக்கு மறைவாக இருந்த, சில இயற்கை அழகுகளை தற்போது நாம் காண்பதற்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…