ஊரடங்கால் குறைந்த காற்று மாசு! தெளிவாக தெரிந்த இமயமலை!

Default Image

ஊரடங்கு உத்தரவால், நம் கண்களுக்கு மறைவாக இருந்த சில இயற்கை காட்சிகளை ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், பல சிரமங்கள் இருந்தாலு, சில நன்மைகளும் உண்டு. ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால், அதன் மூலம் வெளியேற்றப்படும் நச்சு காற்று, மற்றும் கழிவு நீர்களால், இயற்கைக்கு ஏற்படக் கூடிய சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கழிவு நீர் கலப்படம் இல்லாத காரணத்தால் கங்கை நதி தூய்மையானது. மேலும், பெருமளவில் வாகனங்கள் இயக்கப்படததால், காற்று மாசும் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில், இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. காற்று மாசு குறைவால், பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் அழகான காட்சி ஜலந்தர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிந்ததுள்ளது. இதற்கு முன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த பனிமலை தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கண்டுகளித்த ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மேலும், உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரில் இருந்து 636 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனியடர்ந்த இமயமலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது. காற்று மாசால் நம் கண்களுக்கு மறைவாக இருந்த, சில இயற்கை அழகுகளை தற்போது நாம் காண்பதற்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்