வீடியோவில் உள்ள 30 வயது மதிக்கத்தக்க பெண் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு பலி.
சில நாட்களுக்கு முன்பு லவ் யூ சிந்தகி என்ற வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலானது, அந்த வீடியோவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா அவசர வார்டில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தவாரு ஷாருக்கானும், ஆலியா பட் நடித்த ஜிந்தகி பாடலை கேட்டு அந்தப் பெண் ரசித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பெண் கொரோனா தொற்றுநோயுடன் கடினமாக போராடி வந்த நிலையில், வியாழக்கிழமையன்று பரிதாபமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர்துறந்தார். அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் மோனிகா லாங்கே என்பவர் ட்விட்டரில் “நான் மிகவும் வருந்துகிறேன்..நாம் துணிச்சலான ஆத்மாவை இழந்தோம்..ஓம் சாந்தி. இந்த இழப்பை அவரது குடும்பம் மற்றும் குழந்தை தாங்க தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது மறைவுக்கு நடிகர் சோனு சூட்டும் இரங்கல் தெரிவித்தார். அவர் “மிகவும் வருத்தமாக இருக்கிறது, தன் குடும்பத்தை மீண்டும் பார்க்க முடியாது என்று அவர் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார். வாழ்க்கை மிகவும் நியாயமற்றது. வாழத் தகுதியான பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. நம் வாழ்க்கை பின்னர் எவ்வளவு சாதாரணமாக மாறினாலும், இந்த கட்டத்திலிருந்து நம்மாள் ஒருபோதும் வெளியே வர முடியாது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…