கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் பெண், பாடலுக்கேற்றவாறு ரியாக்சன் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்யும் பணியில் மருத்துவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்போடு அர்ப்பணித்துள்ளனர். இதனால்தான் இன்றளவும் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், அதிலிருந்து பலரும் மீண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், உடல் அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை போக்கும் வண்ணம், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிபிஇ உடை அணிந்து வார்டை சுற்றி நடனமாடுவது பாடுவதன் மூலம் நோயாளிகளை உற்சாகப்படுத்தும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் ஆனது.
அதேபோலதான் டாக்டர் மோனிகா லாங்கே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் 30 வயதான ஒரு பெண் கொரோனா அவசர சிகிச்சை வார்டில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, ஆக்சிஜன் மற்றும் பிளாஸ்மா தெரபி ஆகிய சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர் டாக்டர் மோனிகாவிடம், ‘லவ் யூ ஜிந்தகி’ என்ற பாடலை இசைக்குமாறு கேட்டுள்ளார். அவர் இந்த பாடலை தனது போனில், இசைக்க செய்ய, அப்பெண் தன்னை மறந்து ரியாக்சன் கொடுக்கிறார்.
இந்த வீடியோவை பதிவிட்ட இவர், மோசமான நிலையில் இருந்தபோதும் அவள் ஒரு நேர்மறையான எண்ணத்தோடு மனதை தளரவிடாமல் செயல்பட்டு வருகிறாள். இவர் ஒரு வலிமையான பெண். ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று பதிவிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 4 லட்சத்து 43 ஆயிரத்து 900 பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் அப்பெண் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…