நீங்காத அன்பு.. கொரோனாவில் இறந்த மனைவிக்கு வீட்டில் சிலை வைத்த கணவர்!
கொரோனா காரணமாக மனைவி இறந்த பிறகு, வீட்டில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சிலையை வைத்து அன்பை வெளிப்படுத்திய கணவர்.
தபஸ் சாண்டில்யா என்ற நபர் 2021-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் இறந்த தனது மனைவி இந்திராணியின் சிலிகான் சிலையை கொல்கத்தாவில் உள்ள அவர்களின் வீட்டிற்குள் நிறுவியுள்ளார். 65 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரூ.2.5 லட்சம் செலவில் மனைவியின் சிலையை உருவாக்கியுள்ளார்.
அவரது மனைவி இந்திராணியின் சிலை 30 கிலோ எடையும், அவருக்குப் பிடித்த இடத்தில் சோபாவில் அமர்ந்து இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இவரின் செயல் மனைவியின் மீது வைத்துள்ள நீங்காத அன்பாகவே உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.