இஸ்லாமிய மத மாற்றம்.! லவ் ஜிஹாத்-க்கு எதிராக சட்டம் இயற்றப்படும்.! மத்திய பிரதேச முதல்வர் உறுதி.!
லவ் ஜிகாத்-க்கு தடை சட்டம் மகாராஷ்டிராவில் இயற்றப்படும். – மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
லவ் ஜிகாத் எனப்படுவது இஸ்லாமிய சமூக ஆணையோ, பெண்ணையோ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்கையில் இஸ்லாமிய மதம் மாறி தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது தான் லவ் ஜிகாத் எனப்படும் முறையாகும்.
இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத மாற்றங்கள் என்பது எதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். மேலும் , தேவைப்பட்டால், லவ் ஜிகாத்-க்கு தடை சட்டம் மகாராஷ்டிராவில் இயற்றப்படும் எண்வும் உறுதியளித்தார்.
உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, திருமணம் மூலமாக சட்டவிரோத மதமாற்றத்திற்கு தடை விதித்து 2020இல் சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.