மத வழிபாட்டுத் தலங்களில் உரிய அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் – மகாராஷ்டிரா அரசு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சத்தமாக ஒலிபெருக்கிகளை ஒலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டால், மசூதி வாசலில் ஹிந்து பாடல்கள் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் வைக்கப்படும் என MNS தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இனி மத வழிபாட்டு தலங்களில் உரிய அனுமதி பெற்று மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.