இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்பொழுது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தற்பொழுது உத்தரபிரதேச மாநிலத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது.