ஜி20 லோகோ-வில் பாஜக தேர்தல் சின்னம்.! காங்கிரஸ் கண்டனம்.!
மோடியும், பாஜகவும் தங்கள் கட்சியை பிரபலப்படுத்த எந்த வாய்ப்பையும் இழந்துவிட மாட்டார்கள். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 20 நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்புக்கு முதன்முறையாக வரும் வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் 2023, நவம்பர் 30 வரையில் இந்தியா தலைமை ஏற்க உள்ளது. அதற்கான லோகோ (சின்னம்)-வை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த லோகோவானது தாமரை வடிவம் பொருத்தி வடிவமைக்கப்பட்டது. இந்த லோகோ டிசைன் குறித்து காங்கிரஸ் தரப்பு தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில், ‘ மோடியும், பாஜகவும் தங்கள் கட்சியை பிரபலப்படுத்த எந்த வாய்ப்பையும் இழந்துவிட மாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.’ என தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பாஜக தரப்பில், தாமரை என்பது தேசிய சின்னமாகும், அதனை தேசிய சின்னமாக அறிவித்ததே காங்கிரஸ் கட்சி தான் என கூறி வருகின்றனர்.