வெளிநாடுகளுக்கு செல்ல மற்றும் அடையாள ஆவணமாக இருக்கும் பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் துறையினால் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் அச்சியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தின் கீழே மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இடம் பெற்றிருக்கும். புதிய பாஸ்போர்ட்டுகளில் அதிகாரியின் கையெழுத்து இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக கட்டத்தின் உள்ளே தாமரை சின்னம் இருக்கிறது. இதை பற்றி நேற்று மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகவன் கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் சின்னம் தாமரை என்பதாலும், இது காவிமயமாக்குதலின் மற்றொரு திட்டமா? என, செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிகாட்டினார்.
இது பற்றி விளக்கம் அளித்த தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, பாதுகாப்பு காரணமாகவும், போலி பாஸ்போர்ட்டுக்களை கண்டறியவும் தற்போது பாஸ்போர்ட்டில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இது மட்டுமின்றி இன்னும் 10 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை குறித்து வெளிப்படையாக கூறக் கூடாது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் கண்டறியப்படும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும். எனவே இந்தியா என்னும் வார்த்தையுடன் தாமரை இடம் பெற்றுள்ளது. இதைச் சர்ச்சைக்கு உள்ளாக்கத் தேவை இல்லை என கூறினார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…