இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 5 நாகலாந்து லாட்டரி டிக்கெட்களை அவர் வாங்கியுள்ளார். பின் அவர், கடந்த 2ம் தேதி அந்த லாட்டரி டிக்கெட் கடைக்குச் சென்று, தனது லாட்டரி டிக்கெட் பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்துள்ளார். ஆனால், அவரது லாட்டர் சீட்டிற்க்கு பரிசுத்தொகை எதுவும் விழவில்லை என்று கூறவே, வீட்டுக்கு வந்த சாதிக் அந்த 5 லாட்டரி டிக்கெட்டுகளையும் தனது வீட்டு குப்பை தொட்டியில் வீசி எறிந்துள்ளார்.மறுநாளில், அதேகடைக்கு மற்ற பொருட்கள் வாங்க அவர் சென்றுள்ளார். அப்போது, அந்த கடைக்காரர் நேற்று நீங்கள் கொண்டு வந்த லாட்டரி சீட்டுக்கு இன்று பரிசு விழுந்துள்ளது என்று கடைக்காரர் கூற, அளவற்ற மகிழ்ச்சியடைந்த சாதிக், வீட்டுக்கு வந்து லாட்டரி டிக்கெட்டை தேடியுள்ளார்.இறுதியாக அவர் வீசிய குப்பைப் தொட்டியில் அந்த 5 லாட்டரி டிக்கெட்களும் இருந்ததை அவரின் மனைவி கண்டறிந்துள்ளார். இதனை அடுத்து, அந்த லாட்டரி டிக்கெட்களை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு லாட்டரி டிக்கெட்-க்கு ஒரு கோடி ரூபாயும், ஏனைய 4 டிக்கெட்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் பரிசாக கிடைத்துள்ளது. இந்த செய்தி அறிந்த அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், இப்போதே, சாதிக் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். மேலும், தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். குப்பைக்கு சென்ற காகிதம் ஒரு குடும்பத்தை கோபுரத்தில் கொண்டுபோய் வைத்துள்ளது கொல்கத்தா வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…