தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லாரி, சரக்கு ரயில் மற்றும் படகுகளில் பயணித்த காவலர்.!

Default Image

உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். 

இவரது தயார் சில தினங்களுக்கு இறந்துவிட்டார். இவரது இறுதி சடங்கிற்கு பங்கேற்பதற்காக தான் வேலைபார்த்த இடத்திலிருந்து, லாரி, சரக்கு ரயில் படகு என பல விதமாக 1,100 கிமீ பயணித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

அவர் முதலில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரிலிருந்து புறப்பட்டு முதலில் தலைநகர் ராய்ப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நெல்மூட்டை லாரியில் ஏறி, ஜகதால்பூர் சென்றடைந்துள்ளார். அங்கு 2 மணி நேரம் காத்திருந்து மினி லாரி மூலம் கொண்டேகான் என்ற இடத்தை அடைந்துள்ளார். 

அங்கு அவரை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார். பின்னர், அங்குள்ள போலிஸாரின் உதவியுடன் ஒரு மருந்துப்பொருள் ஏற்றிசென்ற வாகனத்தில் ராய்ப்பூர் சென்றுள்ளார்.
 
ராய்ப்பூரில், அவருக்கு தெரிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸார் உதவியுடன், சரக்கு ரெயிலில் பயணித்துள்ளார். அங்கிருந்து 8 சரக்கு ரெயில்களில் மாறிமாறி பயணித்து, அவரது சொந்த கிராமம் அருகே உள்ள சுனார் சென்றுவிட்டார். 
 
அங்கிருந்து 5 கி.மீ. நடை பயணம் மேற்கொண்டு கங்கை ஆற்றை அடைந்துள்ளார். கங்கை ஆற்றில் பயணம் செய்து அவரது கிராமத்துக்கு சென்றடைந்துள்ளார். 3 நாட்களாக 1,100 கி.மீ. பயணம் செய்து 10-ந் தேதி காலையில்தான் ஊரை அடைந்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்