திருமண ஊர்வலத்தில் மோதிய லாரி..! 5 பேர் பலி, 9 பேர் காயம்..!
ஒடிசாவில் திருமண ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சதிகர் சாஹி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கூறிய இன்ஸ்பெக்டர் சுனில் கர், விபத்து நடந்த பிறகு டிரைவர் லாரியுடன் தப்பிச் சென்றார். ஆனால், நாங்கள் பின் தொடர்ந்து சென்று மூன்று கிலோமீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தி, லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.