மக்களவை தேர்தல்:வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டி
- இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது.அதில் ,மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்ட தொகுதியான காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் இம்முறை அமித்ஷா போட்டியிடுகிறார்.மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
நடிகை ஹேம மாலினி மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.