மக்களவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. நேற்று கூட்டத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்தும், பெட்ரோல் விலையுயர்வை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் காரணத்தால் நேற்றைய இரு அவைகளையும் அவைத்தலைவர்கள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். மக்களவை கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்றும் அவை தொடங்கிய உடனே அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தலைவர் ஓம் பிர்லா பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்தி வைத்தார்.
மதியம் அவை தொடங்கிய பின்னரும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இன்றும் கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை தினம் என்பதால் மக்களவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.