மக்களவை தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு!

congress and AAP

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், வரும் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒன்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த கூட்டணியில் சில கட்சிகள் வெளியேறினாலும், தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More – பதக்கம் வென்ற வீரர்களுக்கு லட்ச லட்சமாய் பரிசுத்தொகை.! மத்திய அமைச்சர் அறிவிப்பு.!

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான முகுல் வாஸ்னிக், வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.

அதில், புது டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 இடங்களில் ஆம் ஆத்மியும், சாந்தினி சௌக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 24 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்களும் (பரூச் மற்றும் பாவ்நகரில்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, ஹரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 9  இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு (குருக்ஷேத்ரா) இடத்திலும் போட்டியிடுகிறது. மேலும், சண்டிகரில் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், அதேபோல் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்