மக்களவை தேர்தல் – சோதனையை தொடங்கியது தேர்தல் ஆணையம்!
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அந்தவகையில், மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வரும் 2024 மே மாதம் முடிகிறது. இதனால், 2024 ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கியுள்ளது. அதன்படி, 2024ல் நடக்கவுள்ள மக்களவை தேர்தலையொட்டி சோதனையை தொடங்கியுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். BEL மற்றும் ECIL ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளால் வாக்கு பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் முதற்கட்ட பணிகள் நடைபெறுகிறது.
இதில், மின்னணு இயந்திரங்கள் இருப்பு, மின்னணு இயந்திரங்களின் தேவை குறித்த ஆய்வு நடந்து நடந்த வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.