நாடாளுமன்ற தேர்தல்: 11 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த சமாஜ்வாடி கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இடையே, உத்தரபிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கிறது.

இப்படியான சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது. 16 பேர் கொண்ட பட்டியல் அன்றைய தினம் வெளியிடப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இடையே, 11 தொகுதிகளில் வேட்பாளர்களை சமாஜ்வாடி கட்சி இன்று அறிவித்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்: ஹரேந்திர மாலிக் (முசாபர்பூர்), வீரேந்திர சிங் (சண்டௌலி), அப்சல் அன்சாரி (காஜிபூர்), ஸ்ரேயா வர்மா (கோண்டா), ரமேஷ் கவுதம் (பஹ்ரைச்), எஸ்பி சிங் படேல் (பிரதாப்கர்), ஆர்.கே. சௌத்ரி (மோகன்லால்கஞ்ச்), ராம்பால் ராஜ்வன்ஷி (மிஷ்ரிக்), உஷா வர்மா (ஹர்டோய்), ராஜேஷ் காஷ்யப் (ஷாஜஹான்பூர்) மற்றும் நீரஜ் மவுரியா (ஆன்லா). ’இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களை தொடர்ந்து அறிவிப்பது அக்கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்