மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.!
Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தேர்தல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என நாள்தோறும் செய்திகளில் பார்த்து வந்தோம். அதே போல தேர்தல் நடத்துவதற்கும் தீவிரமான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வந்தது .
Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!
தேர்தல் தேதியானது எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்த நிலையில், தற்போது தேர்தல் தேதி பற்றிய முக்கிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை பிற்பகல் 3 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும், இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More – சில நாட்களுக்கு முன் ‘அந்த’ பெண் என் வீட்டிற்கு வந்தார்.! பாலியல் குற்றசாட்டுக்கு எடியூரப்பா பதில்.
நாளை, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மக்களவை தேர்தலோடு எந்தெந்த மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறும். அந்த தேர்தல் தேதிகள் எப்போது , வேட்புமனு தாக்கல் தேதி, வாபஸ் பெரும் தேதி, தேர்தல் நடைபெறும் தேதிகள், வாக்கு எண்ணிக்கை தேதிகள் என அனைத்தும் நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.