Congress: மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 43 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அறிவித்தது.
அப்போது சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
43 வேட்பாளர்களை கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலில் மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ராகுல் கஸ்வான் ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கமல்நாத்தின் மகன் நக்ல்நாத் மத்தியப்பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிட உள்ளார். அசாம் மாநிலம் ஜோர்கட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கவுரவ் கோகோய் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் "கங்குவா" கடந்த வாரம் வியாழன் அன்று…
அமெரிக்கா: 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய…
சென்னை : நபாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மிகவும்…
சென்னை :மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.. தேவையான பொருட்கள்; வாழைக்காய்=…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…