Categories: இந்தியா

மக்களவை தேர்தல் அதிரடிகள்… பணப்பட்டுவாடா… 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர், இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில், தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இன்று காலை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இரண்டு நாள் ஆலோசனைக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் ஜனநாயக திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்.

Read More – ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்… மத்திய அரசு அறிவிப்பு!

தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை அளிப்பது தொடர்பாக சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், மத்திய பாதுகாப்பு வீரர்களை நிறுத்தவும் கோரிக்கைகள் வந்துள்ளது.

ஜனநாயக முறையில், வெளிப்படையாக மற்றும் சுதந்திரமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.  மேலும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கூறியுள்ளனர். தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். ஒவ்வொரு புகாரின் மீதும் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியின் வேட்பாளர் விவரங்களை கே.ஒய்.சி செயலி மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர், பொய் செய்தி, வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

12 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

12 hours ago