நாடளுமன்ற தேர்தல் 2024 : 23 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த பாஜக.!

Amit shah - PM Modi - JP Nadda

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதியானது அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல் போல இந்த முறையும் தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் முதல் மே வரை நடைபெறும் என கூறப்படுகிறது. அதன் உறுதியான தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும்.

காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு , தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு என படுசுறுசுறுப்பாக அரசியல் கட்சியினர் இயங்கி வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை மாநில, மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர்.

ஆளும் பாஜக கட்சியும் தற்போது தங்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை மாநில வாரியாக அறிவித்துள்ளது.  அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், பீகார், சண்டிகர், டெல்லி, டையூ டாமன்,கர்நாடகா, கேரளா, லடாக், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி, தமிழ்நாடு, சிக்கிம் , உத்திர பிரதேசம், உத்திரகாண்ட், மேற்கு வங்கம் என 23 மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்திற்கு மாநில் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் , ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரவிந்த் மேனன் 2014, 2017 உத்திர பிரதேச தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கு மாநில பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவுக்கு பிரகாஷ் ஜவடேகர் மாநில பொறுப்பாளராகவும், கர்நாடகாவுக்கு எம்.பி டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திற்கு மங்கள் பாண்டே, அமித் மாளவியா, ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  உத்திர பிரதேசத்திற்கு பைஜயந்த் பாண்டா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுளளார். அதே போல மற்ற இதர மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்