மக்களவை தேர்தல் 2019: நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.நாளை தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது.18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
அசாம் 5,அருணாச்சல பிரதேசம் 2, ஆந்திரா 25, பீகார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்திரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என்று மொத்தம் 91 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அதேபோல் அருணாச்சலப்பிரதேசம்,ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.மேலும் நாளை ஒடிசாவில் முதல்கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.