மக்களவை தேர்தல் 2019 : 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவு
5-ஆம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று 5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி ஆகும்.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவாகியுள்ளது . பீகார் – 44.08%, ஜம்மு காஷ்மீர் – 15.34%, மத்திய பிரதேசம் – 53.37%, ராஜஸ்தான் – 50.39%, உ.பி – 44.79%, மேற்கு வங்கம் – 62.79%, ஜார்க்கண்ட் – 58.63% வாக்குகள் பதிவாகியுள்ளது .