மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 34 அமைச்சர்கள்! சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு

BJP Candidates: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் அதில் 34 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் ஹேமமாலினி, கேரள நடிகர் சுரேஷ் கோபி, ஹிந்தி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 50 வயதுக்குட்பட்டோர் 47 பேர் ஆவர், அதே போல பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 28 ஆகும். 34 அமைச்சர்களின் பெயரும் 195 வேட்பாளர்கள் பட்டியலில் அடங்கும். அதில் அமித் ஷா (காந்தி நகர் தொகுதி), ராஜ்நாத் சிங் (லக்னோ தொகுதி), ஸ்மிருதி இரானி (அமேதி தொகுதி), ரவி கிஷன் (கோரக்பூர் தொகுதி) மன்சுக் மண்ட்வியா (போர்பந்தர் தொகுதி), அஜய் மிஸ்ரா (கெரி தொகுதி) ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

Read More – மக்களவை தேர்தல்..! 195 பேர் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்.. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

கடந்தாண்டு மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்ற நிலையில் மாநில முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக தலைமை அவரை நியமிக்கவில்லை. இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் சிவ்ராஜ் சிங் சவுகான் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்