மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு..!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் சபாநாயகர் வெங்கையா நாயுடு மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
மீண்டும் மக்களவை தொடங்கிய நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நிறைவேறியது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025