BREAKING: மஹாராஷ்டிராவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என உத்தவ் தாக்கரேஅறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒடிஷா , பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.இந்த மாநிலத்தில் இதுவரை 1574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 110 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.