#Breaking : மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!- பிரதமர் மோடி அறிவிப்பு.!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘ இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.’ என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்,புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலும், பஞ்சாபில் மே 1 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.