இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை – அமேசான்நிறுவனம்

Default Image

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகள் திறக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விரவணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியாவில் கடுமையான வர்த்தக போட்டி அமேசான் நிறுவனம் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இடையே நிலவி வருகிறது

இந்நிலையில், இரண்டிற்கும் சவாலாக ரிலையன்ஸ் நிறுவனம்  ஜியோ மார்ட்டை, பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்துகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், வர்த்தக போட்டியில் ஜியோ மார்டை சமாளிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் அமேசான் நிறுவனம், இந்தியாவில் 100 உள்ளூர் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்தியாவில் 5,000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் இந்நிறுவனம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் 10 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக அகமதாபாத், கோவை, டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், லக்னோ, மும்பை, பூனே, சஹாரான்பூர் மறறும் சில நகரங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில், வாகன உதிரிபாகங்கள், புத்தகங்கள், ஃபர்னிச்சர்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள், சமையலறை சாதனங்கள் மற்றும் பொம்மை பொருட்கள் போன்றவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பதிவு செய்த அதே தினத்திலோ அல்லது அதற்கடுத்த நாளோ பொருட்களை டெலிவரி செய்திட வேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்