குஜராத் தேர்தல்.! மஹாராஷ்டிராவில் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை.! முதல்வர் அறிவிப்பு.!
குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை.
27ஆண்டுகளாக பாஜக ஆளும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 182- தொகுதிகளுக்கும் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் அரசு விடுமுறை விடுவது வழக்கம். ஆனால், இங்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.