உள்ளாட்சி தேர்தல்: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு- 498 இடங்களில் காங்கிரஸ் வெற்றி !
கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது.
கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கர்நாடகாவில் ஆளும் பாஜகவை காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளி, உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 1184 வார்டுகளை உள்ளடக்கிய 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 வார்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜக 437 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், மதசார்பற்ற ஜனதாதளம் 45 இடங்களிலும், மற்றவர்கள் 204 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 42.06 சதவீதமும், பாஜக 36.90 சதவீதமும், மதசார்பற்ற ஜனதாதளம் 3.8 சதவீதமும், மற்றவை 17.22 சதவீதமும் பெற்றுள்ளன.