உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு-கொரோனாவால் முடிவு!
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் உள்ளாட்சி பிரிவுகளுக்கான தேர்தல் ஆனது வரும் 21 ந் தேதியும்,நகராட்சி மற்றும் மாநகராட்சிக்களுக்கான தேர்தல் 23ந்தேதியும் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் நிம்மகடா ரமேஷ்குமார் திட்டமிடப்பட்ட உள்ளாட்சித்தேர்தல் 6 ஆறு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும் இது குறித்து அரசாணை வெளியிட்ட அம்மாநில அரசு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அதற்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.