#live : கொரோனாவுக்கு எதிரான யுத்தம் – பிரதமர் மோடியின் உரை.!
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில், இன்று கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
- மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்.
- நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார்.
- வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
- நாம் எடுக்கும் நடவடிக்கைகைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
- வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்று மோடி புகழாரம்.
- ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.
- அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள் என தெரிவித்தார்.
- இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது.