கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உரையாற்றியபோது முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தற்போது உரையாற்றி வருகிறார்.
- உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
- கொரோனாவால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து இருக்கிறோம்.
- இந்தியா பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
- கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து கட்டமைப்புகளும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்
- கொரோனாவால் உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்.
- போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை நிறைவேற்றினோம். இதுக்கு முன்னாடி, ஏப்ரல் ,மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது.
- நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அதனை கைவிட்டு விடக்கூடாது.
- கொரோனா நமது மிகப் பெரிய எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
- வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளோம்.
- கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருகிறது.
- கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவிற்கு வரும்.
- தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
- வெளிநாடுகளிலிருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம்.
- கொரனோ என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.
- மக்களை காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்.
- இந்தியாவில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை.
- குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம்.
- கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க கடைசிவரை தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டியது கடமை.
- நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம்.
- கொரோனா பரவல் குறைந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.
- தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன் களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினார்.
- மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.
- மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அதிகரிக்கப்படும்.
- இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
- 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. அவற்றில் மூன்று நிறைவடையும் நிலையில் உள்ளன.
- நலிவற்ற குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளை பற்றியே நமது கவலை.
- இதுவரை இந்தியாவில் 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய தேவையில்லை.
- ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் .
- இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு தரும்.
- நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
- தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும்.