#LIVE: நாடு தன்னிறைவு பெறுவதே.. இந்தியனின் தாரக மந்திரம்..மோடி.!

Default Image

இந்தியா தற்போது இயற்கை பெருஞ்சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என மோடி கூறினார்.

74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி பின்னர், மோடி ஆற்றிய உரை.

  • சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம்.
  • நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.
  • கொரோனாவிற்கு எதிராக போராடும்  முன்கள பணியாளர்களுக்கு நன்றி, கொரோனாவிற்கு  எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
  •  இந்தியா தற்போது இயற்கை பெருஞ்சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதனை சமாளிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்துள்ளது.
  • அடுத்தாண்டு நடைபெறும்  75ஆவது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
  • நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்.
  • நாடு பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் பல்வேறு மொழிகள் என வேறுபாடுகளைக் இருந்தாலும் ஒற்றுமையாக சுதந்திரத்துக்கு போராடியதால் தான் நாம் சுதந்திரம் பெற முடிந்தது.
  • உலகை வழி நடத்தக்கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இந்திய விவசாயிகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. நமது விவசாய துறையின் கட்டமைப்பு தரம் உயர்த்த வேண்டி உள்ளது.
  • உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவேண்டும்.
  • நம் முன் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது .நம்மிடம் முன் வென்டிலேட்டர்கள் இல்லாமல் இருந்தன தற்போது அவற்றை நாம் தயாரிக்கிறோம்.
  • இந்தியாவின் ஒற்றுமை மற்ற உலக நாடுகளுக்கு ஒரு பாடம், சுய சார்பு இந்தியாவே ஒவ்வொரு இந்தியரின் மந்திரம்.
  • உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல்கொடுப்போம் என்பது இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்.
  • ஒரே நாடு, ஒரே வழி, ஒரே ரேஷன் என பல வகைகளில் நாம்  முன்னேறுகிறோம்.
  • கொரோனா காலத்தில்  இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன.
  • நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local
  • நான் உறுதியாகச் சொல்கிறேன் இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளும் உதவ முடியும்.
  • பன்முகத் தன்மையே நமது நாட்டின் பலம், இதனை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.
  • விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்
  • கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு  இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா  காலத்தில் இணைய வழி வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது காணமுடிகிறது.
  • நமது 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
  • பீம் செயலி மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
  • அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும்.
  • பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • முப்படைகளிலும்  நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
  • முத்ரா வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் 70 சதவீத பெண்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்