#Live: ரூ.20 லட்சம் கோடி திட்டம் – மத்திய நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். 

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டு வருகிறார்.

ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் :

  • 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்திருக்கிறார்.
  • சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • நாட்டின் பல்வேறு துறையோடு ஆலோசனை நடத்திய பிறகு இந்த நிதி தொகுப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலகிற்கும் உதவும் நோக்கில் இந்த திட்டங்கள் இருக்கும்.
  • மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.
  • உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி அடிப்படையாக தெரிவித்துள்ளார்.
  • பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை நாட்டின் வளர்ச்சியின் தூண்கள்.
  • இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவும்.
  • ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
  • பொதுமுடக்கத்தால் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் பாதித்திருப்தை அரசு உணர்ந்துள்ளது.
  • நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் திட்டம் மூலம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது.
  • தற்சார்பு இந்தியா என்றால் உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வது அல்ல நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிப்பது.
  • இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
  • 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உள்ளூர் நிறுவனங்களை உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம்.
  • சிறு, குறு தொழில் துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறு, குறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி. இந்த திட்டம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும். கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம்.
  • பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும்.
  • வராக்கடன் பட்டியலில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதிக்கீடு. புதிய கடன் வசதியை பெற சொத்து பாத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை.
  • குறுந்தொழில்களுக்கான முதலீடு வரம்பு 25 லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சம் கோடியாக உயர்வு.
  • நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரம்பு 10 கோடியிலிருந்து 20 கோடியாக அதிகரிப்பு.
  • சிறு தொழில்களுக்கு முதலீட்டு  வரம்பு 5 கோடியிலிருந்து 10 கோடியாக அதிகரிப்பு.
  • 200 கோடி ரூபாய் அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு இனி அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. அவை இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சிறு,குறு நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளும்  அடுத்த 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பி.எஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். ஏற்கனவே, 3 மாதங்களுக்கு பி.எஃப் தொகையை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • பி.எஃப் சந்தா தொகையை அரசு செலுத்துவதன் மூலம், 3.67 லட்ச நிறுவனங்கள் பயன்பெறும். அடுத்த காலாண்டில் பி.எஃப் தொகையை தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10% செலுத்தினால் போதும்.
  • பி.எஃப் சந்தா 12 சதவீதம் என்ற நிலையில், தொழிலாளர்கள், நிறுவனங்கள் நலன் கருதி 2 சதவீதம் குறைப்பு.
  • வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டு கடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நிதி ஒதிக்கீடு.
  • மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
  • வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர், பங்கு தொகையில் ஒரு பகுதியை 3 மாதத்திற்கு அரசு செலுத்தும்.
  • ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்திரவாதம் 6 மாதங்கள் நீட்டிப்பு.
  • ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு என்றும் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் பொருந்தும்.
  • டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு. முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய வரியை 25% குறைக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு மூலம் மக்களிடம் ரூ.50,000 கோடி பணம் புரள வாய்ப்பு. டிடிஎஸ் பிடித்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
  • வருமானம் வரி தாக்கல் கெடு தேதி 31 ஜூலையில் இருந்து 30 நவம்பர் வரை நீட்டிப்பு.
  • அரசு பணி ஒப்பந்ததாரர்களுக்கு கட்டட பணிகளை முடிக்க 6 மாத கூடுதல் அவகாசம்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

10 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

10 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

10 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

11 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

11 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

12 hours ago