#Live: ரூ.20 லட்சம் கோடி திட்டம் – நிதியமைச்சரின் 2ம் கட்ட முக்கிய அறிவிப்புகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்திற்கான 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது. குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார். 

  • இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
  • கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
  • கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 86 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான 63 லட்ச கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
  • 12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.2 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது.
  • 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மக்களுக்கு வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
  • கடந்த ஆண்டு மே மாதத்தை விட, நடப்பு மே மாதத்தில் 40-50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
  • தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 30 சதவிகிதம் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு அதை விட குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் (ESI) நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தை (ESI) பெறலாம்.
  • ஆபத்தான பணிகளை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கு (ESI) கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புலம்பெயர் தொழிலார்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
  • 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும்.
  • அடுத்த 2 மாதங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானிங்கள் வழங்க ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு பொருள் வழங்கப்படும்.
  • வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும்.
  • புலம்பெயர் தொழிலார்களுக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி செலவிடப்படுகிறது.
  • முத்ரா திட்டத்தில் ரூ.50,000க்கு குறைவாக கடன்பெற்று குறித்து காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு 2% வட்டி சலுகை.
  • சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. இதில், ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படும். இதன் மூலம் 50 லச்சம் சாலையோரம் தொழிலார்கள் பயன்பெறுவார்கள்.
  • மலிவுவிலை வீடுகளை வாங்குவதற்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு.
  • பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபாட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு. நபார்ட் வங்கி மூலம் ஏற்கனவே அளிக்கப்படும் ரூ.90 ஆயிரம் கோடியுடன் சேர்த்து கூடுதலாக ரூ.30,000 கோடி வழங்கப்படுகிறது.
  • மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. கிஷன் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்துவதன் மூலம், 2.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்
  • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்! 

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

50 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

2 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

4 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

5 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago