#Live: புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்.

கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். 

  • ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைப்பு. குறைக்கப்பட வட்டில் வங்கிகள் கடன் வழங்கும்.
  • ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு. ரெப்போ வட்டி விகிதம்4.40% லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது.
  • ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
  • உலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.
  • மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது.
  • வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
  • அடுத்த சில மாதங்களில் பருப்பு போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.
  • உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு.
  • தொழித்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17% குறைந்துள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.
  • இந்தியாவின் 60 சதவிகித உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது.
  • உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
  • மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது.
  • 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் சரிவு.
  • மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைவு.
  • 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது.
  • சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும்.
  • ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி.
  • கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் காலஅவகாசம்.
  • ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை.
  • மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.
  • சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணையை செலுத்த மேலும் 3 மாதம் காலஅவகாசம்.
  • வங்கிக் கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.
  • இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது.
  • உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
  • ஏப்ரல் மாதத்தில் உணவுப்பொருள் பணவீக்க விகிதம் 8.6% ஆக அதிகரிப்பு.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

19 minutes ago

இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!

சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…

49 minutes ago

விஜயின் கடைசி படம்! தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு!

சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…

1 hour ago

பிரமாண்டமாக நடைபெறும் குடியரசு தின விழா : கொடியேற்றிய திரெளபதி முர்மு!

டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…

1 hour ago

“தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் “…பத்ம பூஷன் விருது குறித்து அஜித்குமார் எமோஷனல்!

சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…

2 hours ago

குடியரசு தின விழா : தேசிய கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8…

3 hours ago