#Live: நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை.!

Default Image

நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்டம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

  • உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
  • இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகையே சின்னாபின்னமாகியது.
  • கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல.
  • உலகம் நாடுகள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.
  • கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடத்தை கற்றுத்தந்துள்ளது.
  • கொரோனாவுக்கு பின் உலகை இந்தியா முன்னின்று வழிநடத்த வேண்டும். 
  • கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.
  • கொரோனா பாதிப்பு தொடங்கியபோது இந்தியாவில் பிபிஇ கிட்கள் கிடையாது. ஆனால், தற்பொழுது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த கொரோனா வைரஸ் தந்துள்ளது. 
  • இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.
  • உலகுக்கே இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சி.
  • யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
  • உலகம் என்பது ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் நிலை, நமக்கு எப்போதும் சுயநலமில்லை.
  • இந்திய மருந்துகளே உலகிற்கு தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது. 
  • ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். 
  • சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.
  • இந்தியாவின் ஐந்து முக்கியத் தூண்கள் : பொருளாதாரம்,  இந்தியாவின் கட்டமைப்பு, தொழில்நுட்பம் குறித்த தொலைநோக்கு பார்வை, இந்தியாவின் மக்கள் சக்தி, உற்பத்தி தேவை.
  • மொத்தம் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும். 
  • உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
  • கொரோனா பாதிப்பை சமாளிக்க நம்நாட்டில் உள்நாட்டு தொழில்துறையே கைகொடுத்திருக்கிறது.
  • இந்தியா தயாரிக்கும் இத்தகைய பொருட்கள் உலக நாடுகள் கொள்முதல் செய்கின்றன.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்காவது கட்ட பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
  • நான்காவது கட்ட பொதுமுடக்கம் மாறுபட்டதாக இருக்கும். இதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • வேறு யாரையும் நம்பியில்லாத நாடாக நம் நாடு மாறுவதை யாரும் தடுக்க முடியாது பிரதமர் மோடி உரை.
  • 18 ஆம் தேதிக்கு முன்பு நான்காவது கட்ட பொதுமுடக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மோடி கூறியுள்ளார்.
  • தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்