LIVE: நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.! ரூ.1.70 லட்சம் ஒதுக்கீடு .!
தனியார், அரசு ஊழியர் EMI வசூலிப்பை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு.
80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். மேலும் கூடுதலாக 3 மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படும் நிலையில், முதல் தவணையாக ரூ.2,000 உடனடியாக வழங்கப்படுகிறது. இதனால் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார்.
மூத்த குடிமக்கள் 3 கோடி பேருக்கு இரண்டு தவணையாக ரூ.1,000 என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு.
ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.
பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் உத்திரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கான வருங்கால வைப்பு நிதித் தொகையை அடுத்து 3 மாதங்களுக்கு அரசே செலுத்தும்.
தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 70% நிதி அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவோ அதை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.
முதியவர்கள், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
100 பணியாளர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ரூ.15,000க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே இ.பி.எப் சலுகை பொருந்தும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.31,000 கோடி சிறப்பு நிதி உள்ளது. அதை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.
ஊழியர்கள் 3 மாதங்களுக்கு பி.எப் கட்ட தேவையில்லை.