#LIVE: இறுதிக் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா.! இன்று யாருக்கு, எவ்வளவு?

Default Image

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். தற்போது, இன்று இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

  •  ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் இறுதிக் கட்ட அறிவிப்புகள்.
  • நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம், சட்டங்கள் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகவுள்ளது.
  • 100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாகின்றன.
  • கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.
  • ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு பாராட்டு. 
  • மத்திய மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் ஒன்றாக இணைந்து இந்த இக்கட்டான சூழலில் அனைத்து மக்களுக்கும் உணவு சென்று சேர்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. 
  • ஜந்தன் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 நேரடியாக வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
  • ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதாரத்துறைக்கு இதுவரை ரூ.15,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு ரூ.4,113 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொடர்பான ஆய்வகங்கள் அமைக்க ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • கொரோனாவை கட்டுப்படுத்துவற்கான உபகரணங்களை வாங்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டது.
  • PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் 87 லட்சம் N95 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 11.08 கோடி ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 85% கட்டணத்தை மத்திய அரசே ஏற்கிறது.
  • பள்ளிக் கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 12 அலைவரிசைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • கொரோனா காலத்தில் தொழில்நுட்பங்கள் மூலம் ஆன்லைன் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 மின்னணு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கப்படுகிறது. நிதியாண்டில் இந்த திட்டத்திற்காக ரூ.61,000 கோடி ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.
  • சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று நோய் தடுப்பு மையம் அமைக்கப்படும்.
  • ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
  • ஏற்கனவே பள்ளிக் கல்விக்கு 3 சேனல்கள் உள்ள நிலையில், மேலும் 12 டிவி சேனல்கள் தொடங்கப்படும்.
  • 1 முதல் 12ம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மினி-பாடங்கள் உருவாக்கப்படும்.
  • மே 30 முதல் ஆன்லைன் படிப்புகளை தொடங்குவதற்கு 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி.
  • கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தும்.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை ஓராண்டு தள்ளிவைக்கப்படுகிறது.
  • ரூ.1 கோடி வரை வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டுமே நிறுவனங்களை திவாலானதாக அறிவிக்கப்படும்.
  • நிறுவனங்கள் மீதான 7 விதிமீறலுகளுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. 5 விதிமீறல்களுக்கு மாற்று ஏற்பாடு.
  • பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயம்.
  • பொதுத்துறை நிறுவனக் கொள்கையில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்ய முடிவு. தொழில்துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.
  • உத்திசார்ந்த துறைகளில் ஒரேயொரு நிறுவனத்தை தவிர மற்ற அனைத்திலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.
  • உத்திசார்ந்த துறை தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாகின்றன.
  • கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிபங்கீடு ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
  • வருவாய் பங்கீட்டில் மாநிலங்கள் பிரச்னையை சந்தித்து வருகின்றன.
  • மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி விவரம்.
  • வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 12,390 கோடி மாநிலங்களுக்கு கடந்த இரு மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதாரத்துறையில் இருந்து ரூ.4,113 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு 3% இல் இருந்து 5% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக ரூ.4.28 கூடுதலாக நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.
  • மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கடன் பெறும் வரம்பு படிப்படியாக உயர்த்தப்படும்.
  • ஒரு நாடு ஒரே ரேஷன் தொழில் தொடங்க ஏதுவான சூழல், மின் பகிர்மானம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தினால் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம்.
  • மார்ச் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வரி சலுகைகளால் மத்திய அரசுக்கு ரூ.7,800 கோடி இழப்பு.
  • ஏழைகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் மூலம், ரூ 1,70,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • சுயசார்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்புகள் மதிப்பு ரூ.5,94,550 கோடி. இரண்டாம் கட்ட அறிவுப்புகளின் மதிப்பு ரூ.3,10,000 கோடி. மூன்றாம் கட்ட ரூ.1,50,000 கோடி. சுயசார்பு திட்டத்தின் 4 மற்றும் 5 வது கட்ட அறிவிப்புகள் மதிப்பு ரூ.48,100 கோடி.
  • ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் மொத்தம் மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி – நிர்மலா சீதாராமன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae
Chennai Snow Fall