டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடி அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
அதன்படி,
ராஜஸ்தானை சேர்ந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக அஜய்குமார் பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக தேவுசிங் செளகான் பதவியேற்றார்.
திரிபுரா பெண் எம்.பி. பிரதிமா பொய்மிக் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
டாக்டர் சுபாஷ் சர்கார் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
பிஸ்வேஸ்வர் டுடு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஜான் பார்லா மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…